டுவிட்டரில் டிரெண்டாகும் கர்ணன் டீசர் ஹேஷ்டேக்: தனுஷ் என்ன சொல்லியிருக்காரு?

4 March 2021, 12:00 pm
Quick Share


கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தி உருவாகியுள்ள கர்ணன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.


இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், ரஜிஷா விஜயன், கௌரி கிஷான், லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் கண்டா வரச்சொல்லுங்க என்ற அந்த பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து, கர்ணன் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் பண்டாரத்தி புராணம் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பண்டாரத்தி புராணம் என்ற பாடலுக்கு யுகபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார். தேனிசை தென்றல் தேவா இந்தப் பாடலை பாடியுள்ளார்.
ஒப்பாரி பாடல் போன்று இந்த பண்டாரத்தி புராணம் பாடல் அமைந்துள்ளது. பண்டாரத்தி புராணம் பாடலின் பாடல் வரிகள் இதோ…
என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்காலத்தி…

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்காலத்தி…

இந்த நிலையில், கர்ணன் டீசர் டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தனுஷ் கூட தனது டுவிட்டர் பக்கத்தில் விரைவில் கர்ணன் டீசர் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, கர்ணன் டீசர் ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது, அதிக எதிர்பார்ப்புடன் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாக்கப்பட்ட கர்ணன் படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 26

11

2