“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது” என கூறியதை தொடர்ந்து கர்நாடகாவைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகளும் அரசியல்வாதிகளும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் , இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கமல்ஹாசன் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட கர்நாடக பிலிம் சேம்பர் தடை விதித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடுத்தார் . இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறினீர்கள். நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? அல்லது மொழியியல் வல்லுநரா?” என கேள்வி எழுப்பியது.
மேலும் “மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ஏன் வெளியாக வேண்டும் என நினைக்கிறீர்கள்? ரூ.300 கோடி செலவில் படம் எடுத்துள்ளதாக கூறும் நீங்கள் ஒரு மன்னிப்பு கேட்பதால் என்ன?” என்றும் கேள்வி எழுப்பியது.
இதனை தொடர்ந்து கர்நாடகா பிலிம் சேம்பரின் தலைவர் நரசிம்மலுவுக்காக ஒரு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் கமல்ஹாசன். அதில் “தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தை குறித்து அன்பின் மிகுதியால் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைத்தான் எனது பேச்சுக்கள் குறிப்பிட்டனவே தவிர அதில் கன்னட மொழியை குறைத்து பேசியதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.
தமிழை போலவே கன்னட மொழியும் பெருமைக்குரிய கலாச்சார பண்பாடு கொண்டவை. கன்னடர்கள் என் மீது காட்டிய அன்பை நான் நேசித்து வருகிறேன். கன்னடர்கள் தங்களது கன்னட மொழி மீது வைத்திருக்கும் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அக்கடிதத்தில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை கூட இடம்பெறாத நிலையில் கர்நாடகா நீதிமன்றம், “மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள்? கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை கூட இல்லையே” என கேள்வி எழுப்பியது. மேலும் “மன்னிப்பு கேட்பதில் கமல்ஹாசனுக்கு என்ன ஈகோ?” என்றும் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “தவறு செய்தால்தானே மன்னிப்பு கேட்க வேண்டும். தவறாக புரிந்துகொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க?” என்று கூறினார். இவ்வாறு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க தயாராக இல்லாத நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு கர்நாடகா மாநிலத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட கர்நாடகா பிலிம் சேம்பர் ஆர்வம் காட்டியுள்ளது. அதாவது “கர்நாடகாவில் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிகளவு உள்ளனர். ஆதலால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். விரைவில் இவ்விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி படத்தை வெளியிடுவதற்கான வழியைப் பார்க்கலாம்” என கர்நாடக பிலிம் சேம்பர் சேம்பர் தலைவர் நரசிம்மலு தெரிவித்துள்ளார். இதன் மூலம் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.