Exclusive : வெளியானது கார்த்திக், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான சுல்தான் படத்தின் டிரைலர்
1 February 2021, 5:53 pmகொரோனா காரணமாக பல மாதங்கள் மூடியிருந்த திரையரங்குகளை திறந்து 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற விதியால் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்களை திரையிட்டனர். அதற்கு நல்ல வரவேற்பு வரவே, மாஸ்டர் படத்தை வெளியிட முடிவு செய்து வெளியிட்டார்கள். தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் அடுத்தடுத்து திரைப்படங்கள் வருவதற்கும் பெரும் பங்கு வகிக்கிறது.
அந்த வரிசையில் தற்போது கார்த்திக் நடிப்பில் சுல்தான் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் சுல்தான் படத்தில் கார்த்திக் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ராஷ்மிகா மந்தனா தமிழுக்கு அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். பட்டாஸ் திரைப்படத்திற்கு இசையமைத்த விவேக்-மெர்வின் கூட்டணி இந்த படத்தில் இசையமைக்கிறார்கள்.
ஆக்ஷன் பாணியில் உருவாகும் இந்த இந்தத் திரைப்படம் திண்டுக்கல் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கே ஜி எஃப் படத்தில் கருடன் ஆக நடித்திருந்த ராமச்சந்திர ராஜூ, இந்த படத்தில் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.
0
0