“அந்த மனசுதான் சார் கடவுள்” மதுரையில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவிய கார்த்திக் சுப்புராஜ் !

Author: Udhayakumar Raman
28 June 2021, 5:27 pm
Quick Share

தமிழ் சினிமா 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு அப்டேட்டட் வெர்சனாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பல புது புது இளம் இயக்குநர்கள் நல்ல நல்ல கதைகளோடு ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ்.

பிட்சா, ஜிகர்தண்டா, மெர்குரி, இறைவி, பேட்ட போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அந்தப் படத்தைப் பற்றி நாம் பேச வேண்டாம். தற்போது அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், மதுரையில் உள்ள இலங்கை தமிழர்கள் குறித்து பட காட்சிகளில் இடம்பெற்றது. அதன் பால் கொண்ட பாசத்தால் தற்போது பல உதவிகளை செய்து வருகிறார்.

மதுரை ஆனையூர் என்ற பகுதியில் சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு 3 லட்சங்கள் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அவரது நண்பர்கள் கார்த்திக் சுப்புராஜ் சார்பாக இந்த உதவிகளை செய்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விக்ரம், துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

Views: - 434

3

0