தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.
பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து இருவரும் தங்களது வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல கட்சியில், இணைந்து இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி பேட்டி அளித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா குழந்தை கூட சொல்லும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி கேட்க நடிகை கஸ்தூரி நடிகைகளை பொறுத்தவரையில் அந்த நடிகைக்காகவே அந்த படத்தை பார்க்கலாம் என்று யார் ஒருவர் நடித்த படம் அமைகிறதோ, அவர்களுக்காகவே படம் ஒடுகிறதோ, அப்படி இருந்தால் மட்டும்தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்க முடியும்.
அப்படி பார்க்கும்போது இந்த காலகட்டத்தில் அப்படி ஒரு நடிகை இல்லை என்றும், ஆரம்ப காலகட்டத்தில் கேபி சுந்தராம்பாள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி நடித்தார். பல படங்களில் அவரை சுற்றி சுற்றி தான் கதை அமையும். அவருக்கு பின் நடிகை விஜயசாந்தியை சொல்ல முடியும். இந்த இரண்டு பேரை தவிர இப்போது யாருமில்லை என்று வெளிப்படையாக கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும், நயன்தாராவை வைத்து மாயா என்ற ஒரு படம் மட்டும் தான் அவரை மையப்படுத்தி ஓடியது. மத்த படங்கள் எதுவும் அப்படி பார்க்கும் படியாக இல்லை அதனால் அவர் கிடையாது என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.