“நட்புனா என்னனு தெரியுமா?”, “லிஃப்ட்” போன்ற திரைப்படங்களில் கவின் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அவர் நடித்த “டாடா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட் ஆனார் கவின். எனினும் அவர் நடித்த “ஸ்டார்”, “பிளடி பெக்கர்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் “பிளடி பெக்கர்” திரைப்படத்தை தொடர்ந்து “கிஸ்” திரைப்படத்தில் நடித்துள்ளார் கவின். அத்திரைப்படத்தை அடுத்து தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் “மாஸ்க்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக் என்பவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை வெற்றிமாறனுடன் இணைந்து ஆண்ட்ரியாவும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் “மாஸ்க்” திரைப்படத்தின் கதையில் கவினின் தலையீடு அதிகமாக உள்ளதாம். படப்பிடிப்பில் காட்சியமைப்புகளில் அதிகளவில் தலையிடுகிறாராம். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இயக்குனர் வெற்றிமாறனிடம் இப்பிரச்சனையை கொண்டுசென்றாராம்.
இதனை தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்திற்கு வெற்றிமாறனும் வரத்தொடங்கினாராம். அதன் பின் கவின் கதையில் தலையிடவே இல்லையாம். இத்தகவலை வலைப்பேச்சு சக்தி பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.…
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது…
கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
This website uses cookies.