தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார்.
அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
மேலும், இப்படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் வாரி குவித்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதன்படி அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு ரூ. 2 கோடி ருபாய் சம்பளம் கேட்கிறாராம். அதனால் அவரை ரூ. 1 கோடிக்கு கமிட் செய்த நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியது. ஒரே ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் விமர்சித்தனர்.
தற்போது 33 வயதாகும் கவினுக்கு பெற்றோர் திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஆம், வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளதாம். கவின் தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகார பூர்வ தகவலும் வெளியானது. தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யவிருக்கிறார்.
இந்நிலையில் கவின் காதலி மோனிகாவுடன் வீடியோ கால் பேசிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை காதலி வெளியிட்டு அன்பை பொழிந்துள்ளார். மோனிகா தனியார் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஹீரோயின்களையே மிஞ்சும் அழகில் செம கியூட்டாக இருக்கும் மோனிகா தான் கவினுக்கு சரியான பொருத்தம் என ரசிகர்கள் கூறி இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.