நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.
திருமணத்திற்கு பிறகு இவரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தல பொங்கல் தினத்திலும் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்ட இந்த புதுமண ஜோடி ஷூட்டிங் ஸ்பாட்டிலே பொங்கல் வைத்து தல பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், சொந்தங்களே! இது வேலை செய்யும் தல பொங்கல்… ஆனால், எங்களுக்கு உண்மையான பொங்கல் ஜனவரி 25 அன்று என குறிப்பிட்டு ப்ளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் நாள் தான் எங்களுக்கு உண்மையான பொங்கல் என பதிவிட்டுள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.