“இதுதான் உண்மையான காதல்” – அனிருத்துடன் நெருக்கம், காதல் கிசு கிசுக்களுக்கி முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் !

23 February 2021, 10:48 am
Quick Share

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக அனைத்து மீடியாக்களிலும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக வந்த வதந்திகள் காட்டுத் தீயை விட வேகமாக பரவ ஆரம்பித்தன. இதனால் கீர்த்தி சுரேஷ் தரப்பு மிகவும் அப்செட்டில் உள்ளதாம்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது, தனது அம்மா மேனகா இவரது கையில் மருதாணி வைத்து விடும் ஒரு போட்டோவை பதிவிட்டு, “இதுதான் உண்மையான காதல்” என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 893

5

1