நடிப்புக்கு குட் பை சொன்ன விஜய்.. மனம் நொறுங்கிப் போன பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வருடங்களாகவே அரசியலில் நுழைவார் என்ற பேச்சு அடிப்பட்ட போது அவர் இதை மறுக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர் தனது ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சி பெயரை பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டில் எகிறி வருகிறது. நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் லிஸ்ட் விஜய் மேஜையில் இருப்பதாகவும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து அவர் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் இன்னும் நாட்களை கழிக்காமல் சூட்டோடு சூடாக உடனே இப்போதே அரசியலுக்கு வர வேண்டும் என அவரது நலன் விரும்பியாக அறியப்படும் பழ.கருப்பையா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது. இதனால், எப்படி பார்த்தாலும் இன்னும் 6 மாதங்களில் விஜய்கள் அரசியலுக்கு வந்துவிடுவார். மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள். இப்போதே அவரவர் பகுதிகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு விஜயின் வருகையால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவி விஜயின் அரசியல் வருகை குறித்து பேசி உள்ளனர். அதில் ஜெயம்ரவி கூறுகையில், தளபதி விஜய் நமக்கு நிறைய நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்.

அவர் நடித்த படங்களை நாம் மீண்டும் பார்க்கலாமே என கூறினார். இதை அடுத்துப் பேசிய கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய் தரமான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அரசியலில் அவருடைய அடுத்த கட்டத்திற்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். விஜய் சார் நடிக்க மாட்டேன்னு சொன்னதும் குழந்தை அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பார்த்தேன். ஒரு குழந்தைக்கு அப்படி இருக்கும் என்றால், அதே போல நமக்கும் இருக்கும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.