கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.
முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால், கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், சினிமாவிலும் கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள தசரா படத்தின் பிரமோஷனுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மும்பை சென்றிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தசரா படத்தில் நானி மது குடிக்கும் ஸ்டைலை பார்த்து அப்படியே செய்திருக்கிறார். குடித்துவிட்டு பாட்டிலை போட்டுள்ள கீர்த்தி சுரேஷின் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டிலை ஒரே கல்பாக விரைந்து குடித்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் கலவையான கமெண்டுகளை பெற்றுள்ளது. மேலும் நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.