“திரிஷா போல என்னால் அந்த மாதிரி நடிக்க முடியாது” – ஒரே போடாக போட்ட கீர்த்தி சுரேஷ் !

24 February 2021, 4:17 pm
Quick Share

இரண்டு வருடங்களுக்கு முன், கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகையர் திலகம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். சில நாட்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை BJPயில் முக்கிய பங்கு வகிக்கிறார்,

அதனால் கீர்த்தி சுரேஷை பாஜக தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கிறது என்ற தகவல் வெளியானது. ஆனால் அது வதந்தி என்று காலபோக்கில் தெரிந்தது.

அதன் பிறகு சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணம் செய்யப் போகிறார் என்று செய்திகள் பரவ, அதுவும் காலப்போக்கில் வதந்தி என்று தெரியவந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இருக்கும் இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். இப்போது ரஜினியோடு அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் படத்திற்காக தனது கொழுக் மொழுக் லுக்கில் இருந்து ஒல்லியாக மாறி இருந்தார், ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாரா என்று தெரியவில்லை. மீண்டும் தனது பழைய கொழுக் மொழுக் லுக்குக்கு வந்துவிட்டார். இதனால் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் “திரிஷாவை போல் நானும், சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருப்பேன்” என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, “அப்படியென்றால் திரிஷா போல கவர்ச்சி காட்டுவீர்களா ?” என்று கேட்டதற்கு, “திரிஷா போல கிளாமராகவும், அங்கங்கள் தெரியும் படியும் என்னால் நடிக்க முடியாது” என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

Views: - 10

34

7