நான் சந்தோசமா இல்ல அம்மு..! கெளதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து, இப்படி ஒரு டுவிட் போட்ட பிரபல நடிகை..!

Author: Vignesh
29 November 2022, 1:00 pm
gautham karthik marriage - updatenews360
Quick Share

மலையாள சினிமாவில் களியூஞ்சல் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக 90களில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தவர் மஞ்சிமா மோகன்.

இதன்பின் ஒரு வடக்கம் செல்ஃபி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதனைதொடர்ந்து சதிரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இடையில் உடல் எடையை அதிகரித்து காணப்பட்டதால் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். தற்போது கடந்த சில ஆண்டுகளாக கெளதம் கார்த்திக்கை காதலித்து வந்த மஞ்சிமா மோகன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

எளிய முறையில் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதற்கு பிரபலங்கள் ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஒரு பதிவினை போட்டுள்ளார்.

actress-keerthy-suresh-updatenews360

திருமணத்திற்கு தன்னால் வரமுடியவில்லை என்பதை நினைத்து, நான் சந்தோசமாக இல்லை அம்மு, உன்னுடைய சிறப்பான நாளில் இச்சமயத்தில் உன்னோடு நான் இல்லை. என்று கூறி இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 212

0

0