செல்வராகவனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்: சாணிக் காயிதம் படப்பிடிப்பு தொடக்கம்!

26 February 2021, 6:32 pm
Quick Share

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் செல்வராகவன். தனது சகோதரர் தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார். இந்தப் படங்களைத் தவிர, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், என் ஜி கே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், மற்ற இயக்குநர்களைப் போன்று தான் ஒரு ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். ஆம், சாணிக் காயிதம் படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருப்பது போன்று காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தி ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி என்ற படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 58

1

0