தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.
பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே விஜய் – சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும். அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், அதெல்லாம் வதந்தி என்று விஜய் மறைமுகமாக கல்வி விருது விழாவில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், சங்கீதா விஜய் மீதும் அவரை சார்ந்த இரண்டு நபர் மீதும் கடுங்கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது முன்பெல்லாம் விஜய்யுடன் நடிக்கும் நடிகைகளை கூட யார் நடிக்கவேண்டும் என சங்கீதா தான் தீர்மானிப்பாராம். ஆனால், விஜய் கடந்த சில வருடமாகவே புஷ்லி ஆனந்த் ஜெகதீஸ் ஆகியோரது பேச்சை தான் கேட்கிறாராம்.
இதற்கிடையே, அரசியல் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் குடும்பம் சம்பந்தமான சர்ச்சைகளிலும் விமர்சனத்தை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அதுவும் மனைவி சங்கீதா விஷயத்தில் விவாகரத்து செய்துவிட்டார் என்றும், கீர்த்தி சுரேஷ் உடன் திருமணம் என்றும், இணையதளத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக விஜய் கீர்த்தி சுரேஷ் குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மனைவி சங்கீதாவை ஓரத்தில் நிற்க வைத்துவிட்டு மணமக்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் ஜோடியாக மேடையில் நிற்கின்றார் விஜய். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அப்போ கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…
முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
This website uses cookies.