Exclusive : ஜூலையில் வெளியாகும் கே ஜி எஃப் 2- வெளியீட்டுத் தேதியுடன் கூடிய படத்தின் போஸ்டரை பகிர்ந்த ராக்கி பாய்

29 January 2021, 7:13 pm
Quick Share

தென்னிந்திய சினிமாவில் பாகுபலிக்கு பின் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது கே ஜி எஃப் படம் தான். அதன் வசனங்களும் பின்னணி இசையும் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் டிரெண்ட் ஆனது. அதன் பின்னணி இசையை டிக் டாக் செய்து பரவ விட்டார்கள் இந்தியர்கள்.

கன்னட சினிமாவில் முதன் முதலாக இந்த அளவு வெற்றி பெற்ற படம் கேஜி எஃப் படம்தான் என்றும் சொல்லும் அளவு மாபெரும் வெற்றி பெற்றது. கன்னடத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டது.

தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் கே ஜி எஃப் 2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் யூடியூபே அதிரவைத்தது. காவல்நிலையத்தை சுட்டுத்தள்ளி அந்த துப்பாக்கி வெப்பத்திலிருந்து சிகரெட்டை பற்ற வைத்த காட்சியை ஸ்டேட்டஸ் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

இந்த படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சஞ்சய் தத் இந்த படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 16ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதை இந்தப் படத்தின் கதாநாயகன் யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் கேஜிஎப் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.

Views: - 1

0

0