இப்படி ஒருத்தி கிடைச்சா எவனும் வயசு பார்க்கமாட்டான் – புது பொண்டாட்டியுடன் குதூகலிக்கும் கிஷோர்!

Author: Shree
25 March 2023, 11:40 am
Quick Share

கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளிப்பருவ பிள்ளைகளையும் அவர்களின் வளர்ப்பும் குறித்து வெளியான படம் ” பசங்க ” பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்தில் தான் விமல் அறிமுகமானார். இதில் குழந்தை நட்சத்திரமாக அன்புக்கரசு வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்திருந்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிசோடா, சகா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். இதனிடையே பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து கொண்டிருப்பதாக சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

ப்ரீத்தி லட்சிமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ பல ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் கிஷோரை விட 4 வயது மூத்தவர் என்பதால் இவர்களது காதலை நெட்டிசன்ஸ் விமர்சித்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி இவர்கள் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் ஆன கையேடு இந்த புது ஜோடி பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் வயசு வித்தியாசம் விமர்சிக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, ““எனக்கு கிடைத்து போன்று ஒரு பெண் ஒருவருக்கு கிடைத்திருந்தால் அந்த கேள்வியை அவர் கேட்க மாட்டார். அவரவர்களுக்கு ஏற்பட்டால் தான் தெரியும். எங்களுக்கு புடிச்சுடுச்சு ரெண்டு பேரு வீட்டிலேயும் ஓகே சொல்லிட்டாங்க இதுக்கு மேல என்ன வேணும்? என்று முடித்தார் கிஷோர்.

அதன் பின்னர் பேசிய ப்ரீத்தி வயசு வெறும் நம்பர் தான் இதை சந்தோசமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இந்த புதுமண தம்பதியின் இந்த கலகலப்பான நேர்காணல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Views: - 633

64

11