பசக் பசக் என முத்தம் – புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வயிறு எரிய செய்யும் அஞ்சலி

24 January 2021, 8:11 pm
Quick Share

தன் முதல் படமான கற்றது தமிழ் படத்தில் பக்கத்து வீட்டு பெண் போல பரிச்சயமான முகம் கொண்டவர் அஞ்சலி. ராம் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஞ்சலியின் மேல் கண் வைக்க ஆரம்பித்தார்கள். இவருக்காகவே, உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் வெளியான அங்காடித்தெரு படம் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்தது.

தொடர்ந்து மகிழ்ச்சி, தூங்காநகரம், கருங்காலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், போன்ற படங்களில் நடித்தாலும் எதிலும் சொல்லிக் கொள்ளுமளவு கதாபாத்திரம் அமையவில்லை. சரவணன் இயக்கிய எங்கேயும் எப்போதும் படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை தூக்கி வைத்து கொண்டாடினர். பல படங்கள் நடித்திருந்தாலும் பெரும்பாலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய அஞ்சலி பேரன்பு, நாடோடி 2, பாவக்கதைகள் போன்ற படங்களில் நடித்தார்.

எப்போதும் அடக்கமாக நடிக்கும் அஞ்சலி பாவ கதைகள் ஆந்தாலஜியில் லவ் பண்ணா உட்றணும் படத்தின் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து நடித்தது மட்டுமில்லாமல் கல்கி கோச்சலினோடு முத்தக்காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அஞ்சலி தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், நாய்க்குட்டிக்கு முத்தம் தருவது போல போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த நாய்க்குட்டிக்கு அதிர்ஷ்டம் என புலம்பி வருகின்றனர்.

Views: - 5

0

0