விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார். டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா.
மிகவும் திறமையாக வளர்ந்து வரும் நடிகரான பாலா தான் சம்பாதித்த பணத்தை நிறைய இயலாதவர்களுக்கும் முடியாதவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கூட ஈரோடு மாவட்டம் கடம்புறை அடுத்து குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் தாண்டி வந்து தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர்.
மக்களின் மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸை வழங்கி உள்ளார் பாலா. இதை அவர் தனது சொந்த பணத்தின் மூலமாக வழங்கினார். பாலாவின் இந்த செயலை பலரும் பாராட்டினர். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1000 ரூபாய் என்ற வீதத்தில் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உதவியிருக்கிறார் பாலா.
பாலாவின் இந்த உதவிகள் குறித்து மக்கள் அவரை பெருமையோடு பேசினார்கள். அப்போது பேட்டி ஒன்றில் பாலாவிடம் விஜய் போன்று அரசியலுக்கு வரும் ஆசை ஏதாவது உள்ளதா? என கேட்டதற்கு “விஜய் ஒரு மலை நான் சாதாரண இலை” என மிகவும் சிம்பிளாக தன்னடக்கத்தோடு பதில் கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.