“நீ வந்ததே 7 செகண்ட் தானடா” – கிண்டல் செய்த நபருக்கு தீனா கொடுத்த உருக்கமான பதில் !

19 January 2021, 8:55 pm
Quick Share

கைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை இயக்கினார். சமீபத்தில் ரிலீஸ் ஆனா இந்த படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தில் கண் இமைக்கும் நேரத்தில் வந்து போகும் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் தீனா நடித்தார். இந்த படத்துக்கு சில விமர்சனங்கள் வைக்கபட்டது. அதில் முக்கியமான விமர்சனம் என்ன என்றால், விஜயை விட விஜய் சேதுபதிக்கே முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்னொரு முக்கியமான விமர்சனம் என்ன என்றால், நிறைய கதாபாத்திரங்கள் எதற்கு இருக்கு என்றே தெரியவில்லை என்று கூறுகிறார்கள். இப்படி இருக்க மாஸ்டர் படக்குழவுடன் தீனா எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதற்கு ரசிகர் ஒருவர், “டேய் நீ வந்ததே 7 செகன்ட் தானடா” என்று கேலியாக கமன்ட் செய்ய, அதற்கு தீனா, “எனக்கு அதுவே பெரிய விஷயம் பிரதர். அந்த படத்துல 7 செகண்ட் வர்றதுக்கு எனக்கு 7 வருஷம் ஆச்சி” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Views: - 0

0

0