சினிமா / TV

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை சுனில் நரங், புஷ்குர் ராம் மோகன் ராவ், அஜய் கைகாலா ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம்,  கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

முதல் விமர்சனம்

எப்போதும் பெரிய ஹீரோ திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்றால் அத்திரைப்படங்கள் வெளியாவதற்கு ஐந்தாறு நாட்களுக்கு முன்பே அத்திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களை பதிவிட்டுவிடுவார் உமைர் சந்து. கடந்த ஜூன் 5 ஆம் தேதி கமல்ஹாசனின் “தக் லைஃப்” திரைப்படம் வெளியானது. ஆனால் அத்திரைப்படம் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே “தக் லைஃப்” திரைப்படம் அபாரமாக இருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். 

இவர் ஒரு Fake Reviewer என்று பலரும் விமர்சித்தனர். படத்தை பார்க்காமலே விமர்சனம் செய்வார் என்று இவரை குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர். எனினும் இவர் புகழ்ந்த “தக் லைஃப்” திரைப்படம் படுதோல்வியடைந்தது. இவரது எக்ஸ் தளப் பதிவில் “நரி ஊளையிட்டிருச்சு, சக்சஸ்” என்பது போன்ற கம்மெண்ட்டுகளால் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்திருந்தனர். 

அந்த வகையில் உமைர் சந்து தற்போது “குபேரா” திரைப்படத்தை குறித்து புகழ்ந்து கூறியுள்ளார். அதாவது “குபேரா” திரைப்படம் ஒரு பவர்ஃபுல் கிரைம் திரில்லர் திரைப்படம் எனவும் நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா ஆகியோர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள், படத்தின் கதை அருமையாக இருப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். இவரது டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும், இவரை ட்ரோல் செய்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

5 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

6 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

7 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

7 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

7 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

8 hours ago

This website uses cookies.