வெற்றிமாறனும் இல்ல…விஷாலும் இல்ல – விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவர் தான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் இறங்கிடுவார் என கூறப்பட்டது. ஆனால், சினிமாவிற்கு டாட்டா காட்டும் கடைசி திரைப்படம் விஜய்யின் வரலாறு பேசும் திரைப்படமாக தரமாக இருக்கவேண்டும் என கருதி கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் விஜய்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் கோட்டா நீலிமா என்பவர் எழுதிய நாவல் ஷூஸ் ஆஃப் தி டெட் கதையை கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். இந்த கதையில் கோவிந்த் , கோபிநாத் இருவரும் சகோதரர்கள். இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். இந்த நாவல் விவசாயிகளின் துயரங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்வாக தோல்விகளையும் தோலுரித்து காட்டியது.

இந்த கதையை தான் தளபதி 69 படத்திற்காக அரசியல் , ஊழல், லஞ்சம் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிகல் கதையாக தயார் செய்துள்ளாராம் வெற்றிமாறன்.விஜய் அரசியலுக்கு வரவுள்ள நிலையில் கடைசி படமாக இது வெளியானால் தரமான அரசியல் படமாகவும், மிகச்சிறந்த அரசியல் என்ட்ரியாகவும் அமையும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷூஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டார் என்றெல்லாம் ஏற்கனவே செய்தியில் பார்த்திருந்தோம்.

அதன் பின்னர் தளபதி 69 படத்தை பிரபல நடிகர் விஷால் இயக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விஜய் தளபதி 69 படத்தோடு சினிமாவிற்கு எண்டு போட்டுவிட்டு அடுத்து முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதால் இப்படத்தில் தரமாக நடிக்க விஜய் முடிவெடுத்துள்ளார். அப்படியிருக்கும்போது விஜய் விஷால் இயக்கத்தில் எல்லாம் நடிப்பாரா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதெல்லாம் நடக்குற காரியமா? என ரசிகர்கள் கலாய்த்தனர் நெட்டிசன்ஸ். ஒருவேளை விஜய் அரசியலில் பின்னடைந்துவிட்டால் மீண்டும் சினிமாவுக்கு வந்து விஷால் இயக்கத்தில் நடிப்பார் என ட்ரோல் செய்தனர்.

மேலும் தளபதி 69 படத்திற்காக விஜய் ரூ 200 கோடி சம்பளம் கேட்டாராம். இதை கேட்டதும் சற்று ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம் சில நொடிகளில் ஓகே சொல்லிவிட்டதாம். காரணம் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் தாறுமாறாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கணக்குப் போட்டு விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க ஓகே சொல்லிவிட்டதாம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இப்படத்தை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மாஸ் ஹிட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தை இயக்கப்போவது வெற்றிமாறன் , விஷால், கார்த்திக் சுப்புராஜ், மணிரத்னம், அட்லீ என அடுக்கடுக்காக சூப்பர் ஹிட் இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது இவர்களை தாண்டி அக்கட தேசத்து ஹிட் இயக்குனரின் பெயர் ஒன்று லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. ஆம், அண்மையில் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து குண்டூர் காரம் படத்தை இயக்கிய இயக்குனர் திரிவிக்ரம் தான் இப்படத்தை இயக்கவுள்ளாராம். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பாப்போம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

42 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

1 hour ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

1 hour ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

2 hours ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

2 hours ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

This website uses cookies.