தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், பவதாரிணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பவதாரிணி விஷயம் குறித்து வெளியில் தெரியாதது குறித்து குட்டி பத்மினி பேசியுள்ளார். இந்த கஷ்டமான விஷயத்தைப் பற்றி வெளியே தெரிந்தால், ஒரு சிலர் ஐயோ இப்படி ஆகிவிட்டது என்று பரிதாபப்படுவார்கள். ஆனால், பலர் இது இவர்களுக்கு தேவைதான் இப்படித்தான் ஆகும் என்றெல்லாம் வாய்க்கு வந்த மாதிரி பேசுவார்கள்.
அந்த மாதிரி இடம் கொடுக்கக் கூடாது என்கிற விஷயத்தில் இளையராஜா குடும்பம் கவனமாக இருந்தனர். அதனால்தான், அந்த விஷயத்தை வெளியில் கூறவில்லை. ஆனால், பவதாரிணியின் விஷயம் இளையராஜாவுக்கு கூட தெரியுமா என்ன என்பது உறுதியாக தெரியவில்லை என்று குட்டி பத்மினி பேசியுள்ளார்.
மேலும், இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பவதாரிணியின் கணவர் பிரிந்த நிலையிலும், கடைசி காலத்தில் அவருடன் இருந்துள்ளார் என்று குட்டி பத்மினி பேசியுள்ளார்.
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
This website uses cookies.