ஜீன்ஸ் டி-ஷர்டில் நியூ லுக்கில் நடிகை லக்ஷ்மி மேனன் ! வைரலாகும் புகைப்படம் இதோ !

23 August 2020, 3:00 pm
Quick Share

லக்ஷ்மி மேனன் திடீரென படங்களில் காணாமல் போனதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

தற்போது நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி
வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் Jeans அணிந்து க்யூட்டான தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு அவர் வெளியிடும் புகை படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் சினிமா ஆசையை தூண்டும் வகையில் லைக் செய்வது மட்டுமல்லாமல் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Views: - 0

0

0