சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுக்க வெளியாகியுள்ள திரைப்படம் லால் சலாம். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி முஸ்லீம் நபராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் படம் முழுக்க ட்ராவல் செய்கின்றனர்.
லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இப்படத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இப்படம் தமிழ்நாட்டில் 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் காலையிலேயே முதல் காட்சி தொடங்கி விட்டது. படத்தை பார்த்த ஆடியன்ஸ் தங்களின் கலவையான விமர்சனத்தை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தின் 3வது நாள் வசூல் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள லால்சலாம் திரைப்படம் வெளிவந்து 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை உலக அளவில் 24 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு எதிர்பார்த்தை விட குறைவான வசூல் தான் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வார இறுதி நாட்களில் ஒழுங்காக வசூல் இல்லாதது வாரத்தின் வேலை நாளான திங்கட்கிழமை படத்தின் நிலைமை என்னவாகும் என்று அச்சம் இருந்து வந்தது. எதிர்பார்த்தபடியே நான்காவது நாளில் கடுமையான அடியை வாங்கி இருக்கிறது லால் சலாம். அதாவது, ஒரு கோடி ரூபாய் தான் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது ஆக மொத்தம் வெளியான 4 நாட்களிலேயே லால் சலாம் சமாதிக்கு சென்றுவிட்டது உறுதியாகியிருப்பதாக கருத்துக்கள் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
This website uses cookies.