தர்ஷனுக்கு ஜோடியான லாஸ்லியா: கூகுள் குட்டப்பன் படத்துக்கு பூஜை போட்ட படக்குழு!

28 January 2021, 2:15 pm
Quick Share


ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியாக நடிக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானவர் தர்ஷன். இந்நிகழ்ச்சியில், தர்ஷன் தான் டைட்டில் வின்னராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், முகென் டைட்டில் வின்னரானார்.

தர்ஷன் 2 ஆம் இடம் பிடித்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியானது. அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியாகி ஹிட் கொடுத்த ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை மாஸ் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார். அதோடு, தர்ஷனுக்கும் அப்பாவாக நடிக்கிறார்.
இந்த நிலையில், ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு கூகுள் குட்டப்பன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோவாக நடிக்கும் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியாக நடிக்கிறார்.

கூகுள் குட்டப்பன் படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. அதோடு, பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. கூகுள் குட்டப்பன் பட பூஜையில் யோகி பாபு, விக்ரம், பார்த்திபன், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் தர்ஷனுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார்.

சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர்களாக அவதாரம் எடுக்கின்றனர். இதற்கு முன்னதாக கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.


வெளிநாட்டில் இருக்கும் மகனாக தர்ஷனும், அவர் காதலிக்கும் இலங்கை வாழ் பெண் கதாபாத்திரத்தில் நடிகை லாஸ்லியாவும் நடிக்கிறார். இதற்கு முன்னதாக லாஸ்லியா பிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 19

0

0