பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களது மகனும் பிரபல நடிகருமான பிரேம்ஜி நிறைய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், இதனைத் தொடர்ந்து, சென்னை 600 028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.
‘என்ன கொடுமை சார் இது? , எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா?’ உள்ளிட்ட டயலாக்குகள் மூலம் இவர் பேமஸ். திரைப்படங்கள், வெப் சீரீஸ் உள்ளிட்டவைகளில் நடித்து வரும் இவர், சில பாடல்களும் பாடியுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இவருக்கு வயது 45 வயதாகிய போதிலும், இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், இந்த வருஷம் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வேன் என பிரேம்ஜி உறுதியளித்து புத்தாண்டு வாழ்த்து கூறி இருந்தார்.
உடனே பிரேம்ஜி கல்யாணம் செய்து கொள்ளும் பெண் யார் என்று ஊடகங்கள் தேடத் தொடங்கியது. 45 வயதான பிரேம்ஜி 23 வயதான ஒரு இளம் பாடகியை திருமணம் செய்ய போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில், பிரேம்ஜியின் திருமண பத்திரிகை வெளியாகி உள்ளது. அதில், ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் அவரின் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அந்த பெண்ணின் பெயர் இந்து என பத்திரிக்கையில் இருக்கிறது. சென்னையில், ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.