சினிமா / TV

காசு மேலே காசு வந்தா…. லெஜண்ட் சரவணன் இத்தனை கோடி மதிப்புள்ள கார்களை வைத்துள்ளாரா?

லெஜெண்ட் சரவணன்:

சரவணா ஸ்டோர் கடை உரிமையாளரான லெஜெண்ட் சரவணன் தமிழகத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வருகிறார். பல கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியாக இருந்து வரும் லெஜெண்ட் சரவணன் சென்னையில் பிரபலமான தொழிலதிபராக இருந்து வருகிறார்.

இப்படியான சமயத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் திரைப்படத்துறைக்கு வந்து தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலமாக தன் நடிப்பு பயணத்தை தொடங்கினார். சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்பது அவரது மிகப் பெரிய ஆசை கனவு .

அதன் வெளிப்பாடாக தான் தன்னுடைய கடை விளம்பரத்துகளில் தானே நடித்து ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் ஆடி விளம்பரங்களில் நடித்து அசத்து இருந்தார். அதுவே அந்த கடைக்கு மிகப்பெரிய அடையாளமாகவும் பிரபலமாகவும் அமைந்தது. இதுதான் அவரது சினிமா ஆசைக்கு வழி வித்திட்டது.

கார்களின் கலெக்ஷன்ஸ்:

லெஜெண்ட் சரவணன் சினிமாவைப் போலவே கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவராம். உலகில் விலையுயர்ந்த கார்களாக பார்க்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் காரை மொத்தம் மூன்று வைத்திருக்கிறார். அதிலும் ரூ.12 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், ரூ.8.23 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் விரைத், ரூ.7.25 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகிய கார்கள் உள்ளன.

அஷ்டன் மார்டின் DB11, இதன் மதிப்பு ரூ.4.44 கோடியாகும், அஷ்டன் மார்டின் ரேபிட் S, இதன் மதிப்பு ரூ.3.89 கோடி .அத்துடன் மெர்சிடிஸ் E63 AMG, இதன் மதிப்பு ரூ.1.79 கோடி மெர்சிடிஸ் S63 AMG, இதன் மதிப்பு ரூ.2.86 கோடி மெர்சிடிஸ் கார் மேபேஜ் S650, இதன் மதிப்பு ரூ.3.3 கோடி. மேலும் லம்போகினி அவெண்டேடர், இதன் மதிப்பு ரூ.5 கோடி லம்போகினி ஹரிகேன், இதன் ரேட் ரூ.3.22 கோடி இதுதவிர பென்ட்லி நிறுவன கார்கள் லெஜண்ட் சரவணனிடம் 4 உள்ளது.

Anitha

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

5 hours ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

6 hours ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

7 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

8 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

9 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

10 hours ago

This website uses cookies.