விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “LIK”. இத்திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாராவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித்குமாரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் கௌரி கிசான், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, மிஷ்கின், சீமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் உருவாகி வந்த சமயத்தில் இத்திரைப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையை விட இன்னும் அதிக தொகை தேவைப்படுவதாக விக்னேஷ் சிவன், லலித்குமாரிடம் கூறியதாகவும் ஆனால் லலித்குமார் இதற்கு மேல் செலவு செய்யமுடியாது என கைவிரித்ததாகவும் செய்திகள் தெரிவித்தன. இந்த விவகாரத்தால் இருவருக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பே தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இருவருக்கிடையில் இருந்த மனஸ்தாபங்கள் விலகி இத்திரைப்படம் பிக் அப் ஆகிவிட்டதாக தெரிய வருகிறது. அதன்படி இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் விதமாக ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் தற்போது தமிழின் மிக முக்கிய நடிகராக உருமாறி வருகிறார். அவர் முதன்முதலில் நடித்த “லவ் டூடே” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த “டிராகன்” அவரது கெரியரின் மற்றுமொரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது. “LIK” திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் “Dude” திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக தோன்றுகிறார்.
காமெடி நடிகரான சந்தானம் தற்போது நடித்தால் ஹீரோதான் என்ற பாணயில் அண்மைக்காலமாக நடித்து வருகிறார். படம் ஒடுதோ இல்லையோ, வருடத்திற்கு…
ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பெண் மருத்துவர் நம்ரதா சிகுருபதி. ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் இயக்குனராக பணியாற்றிய நம்ரதா…
குடும்ப உறுப்பினராக மாறிய மீடியா நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரின் திருமணம் கடந்த ஆண்டு மார்ச் மாதம்…
மயங்கி விழுந்த விஷால் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருநங்கைகளுக்கான…
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
This website uses cookies.