பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகி, இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர். பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உடம்புல அவ்வளவு பிரச்சினை.. லாஸ்லியா இதனால் தான் இப்படி ஆனாராம்..!
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. வானிலை மோசம் அடைந்ததால் அங்கு ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பிட அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!
இதனால், படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும், தாமதம் ஆனது. மேலும், விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியிடாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பின் ஷூட்டிங் போது, அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் ஓட்டி வந்த கார் பட்டுப்பாட்டை இழந்து கடுமையான விபத்தில் சிக்கிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஜாம் ஜாம்னு நடந்து முடிந்த இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம்.. நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்..!
இந்நிலையில், பிரபல இயக்குனர் லிங்குசாமி ஜீ படத்தின் போது அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், அஜித்துக்கு அந்த நேரத்தில் படம் நடிக்கவே ஆசை இல்லை. என் படம் மட்டுமல்ல வேறு எந்த படமும் நடிக்க அவருக்கு ஆசையே இல்லை. அவருக்கு முழுக்க முழுக்க கார் ரேஸ் மீது தான் ஆர்வம் இருந்தது என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.