தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மனோ பாலா, நல்ல நடிகரும், இயக்குனரும், சதுரங்க வேட்டை போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளர் என கோலிவுட் ரசிகர்களின் பிரபலமானவராக இருந்து வருகிறார். பார்ப்பதற்கு ஒல்லியான மெலிந்த உடலமைப்பை கொண்டிருந்த மனோபாலா அதுவே அவரின் காமெடியை ரசிக்கும்படியாக அமைந்து.
ஆனால் உண்மையில் அவரது உடல் இப்படி இருக்க காரணம், அதிகமான சிகரெட் பிடிக்கும் பழக்கமும், குடி பழக்கும் தான். இதை அவரே பேட்டியில் கூட வெளிப்படையாக கூறியிருக்கிறார். சம்பாதிக்கும் பணத்தை மருத்துவரிடம் கொடுத்தே அழித்து வந்துள்ளார். எலும்புகள் எல்லாம் பலவீனமாகி இனிமேல் சிகரெட் பிடித்தீங்கன்னா இறந்துவிடுவீர் என டாக்டர் கூறியதால் எல்லாத்தையும் நிறுத்திவிட்டார்.
ஆனாலும், அவரது உடல் பாதிப்படைந்தது அடைந்தது தான். இதனால் இதனிடையே அவ்வப்போது மாரடைப்பால் அவதி பட்டு வந்தார். இதனிடையே கடந்த 3ம் தேதி மரணமடைந்தார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் நடித்தார். இதையடுத்து விஜய் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். விஜய் – மனோபாலாவுக்கு இடையில் ஒரு நல்ல அண்ணன் தம்பி உறவு இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடித்த மனோபாலாவை காஷ்மீர் படப்பிடிப்பின் பாதியில் இருந்து வெளியேற்றியது குறித்த உண்மை சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, மனோ பாலா சிம்லாவில் நடைபெற்ற லியோ படத்தில் படப்பிடிப்பு சம்பந்தமான சில தகவல்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் திட்டு வாங்கினாராம். இதுபற்றி லோகேஷ் விஜய் உடன் கலந்தாலோசித்து, மனோபாலாவை அங்கிருந்து உடனே கிளம்ப சொல்லி சில நாட்கள் கழித்து கூப்பிடுகிறோம் என சொல்லி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.
பின்னர், மனோபாலா வேண்டாம் என முடிவெடுத்து லோகேஷ் கனகராஜ் அவர் நடித்த காட்சிகளை கூட நீக்கிவிடலாம் என முடிவெடுத்துள்ளார். அந்த நேரத்தில் தான் அவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். இதையடுத்து விஜய் லோகேஷுக்கு மனோ பாலா நடித்த சிங்கிள் காட்சியை கூட நீக்கக்கூடாது இது தான் நாம் அவருக்கு செய்யும் கடைசி மரியாதை என ஆர்டர் போட்டாராம் . இது கோலிவுட் சினிமாவில் பேசுபொருளாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.