லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய படம் கூலி. ரஜினியை வைத்து இயக்கியதால் இருவரும் முதல்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படத்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் ரஜினி ரசிகர்கள். நாகர்ஜூன், ஸ்ருதிஹாசன், சௌபின், உபேந்திரா, சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெயிான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் இதுவரை 405 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் லோகேஷ் ரஜினியுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாகவும், கூடுதலாக கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினி, கமல் இதுவரை 13 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த இணை மீண்டும் சேராதா என ஏங்கி கிடக்கும் ரசிகர்கள் சூப்பரான தகவலை பகிர்ந்துள்ளதார் சினிமா விமர்சகர பிரசாந்த் ரங்கசாமி. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கமல், ரஜினி இணைந்து அவர்கள், 16 வயதினிலே, தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுறிது, ஆடு புலி ஆட்டம், அலாவுதினும் அற்புத விளக்கும், நட்சத்திரம், தில்லு முல்லு, அக்னிசாட்சி போன்ற பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
பிறகு தனித்தனியே பிரிந்து நடிக்க ஆரம்பித்த இவர்கள் இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளனர். இவர்கள் மீண்டும் இணைந்தால் மிகப்பெரிய வெற்றி தான் என சொல்லப்படுகிறது. அதுவும் விக்ரம் படத்தின் இணை பாகமாக இந்த படம் அமைந்தால் LCU நிச்சயம் எதிர்பார்க்காலம் என கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.