தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத காமெடி நடிகராக மக்கள் மனதில் ஒரு ஆழமான இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு. ஒரு நேரத்தில் இவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எந்த ஹீரோக்களின் படங்கள் வெளியானாலும் அதில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் கட்டாயம் இடம் பெற்று விடும்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் நடிகை வடிவேலு குறித்து அடுக்கடுக்கான பல புகார்கள் இருந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக முன்பணத்தை வாங்கிவிட்டு நடிக்க வராமல் இருப்பது. கொடுத்த நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடிப்பது, தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளை இழிவு படுத்துவது, யாரையும் வளர விடாமல் தடுப்பது இப்படி பல குற்றச்சாட்டுகள் வடிவேலுவின் மீது அடுக்கடுக்காக இருந்து கொண்டு தான் வருகிறது.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல காமெடி நடிகர் ஆன சுவாமிநாதன் வடிவேலு குறித்து பேசி இருக்கும் விஷயம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. வடிவேலு ரொம்ப கொடூரமானவர். காமெடி நடிகர்களாக அவருடன் நடிக்கும் சில நடிகர்கள் நடிக்கவே கூடாது என்று தடுப்பார் என்னையும் அப்படித்தான் தடுத்திருக்காரு.
ஆனால் நான் செந்தில் விவேக் சூரி இவங்க கூட நடிக்கும்போது அவர்களுக்கு அந்த எண்ணமே இருந்தது கிடையாது. அடுத்தவங்களும் வளரட்டும் என்று தான் நினைப்பாங்க. ஆனால், இதில் வடிவேலு தான் மிகவும் மோசமானவர் என நடிகர் சுவாமிநாதன் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
0
0