வேஷ்டி சட்டையில் குத்தாட்டம் போட்ட ஹர்பஜன்: வைரலாகும் ப்ரெண்ட்ஷிப் புகைப்படம்!

16 February 2021, 8:48 pm
Quick Share

ஹர்பஜன் சிங், லோஸ்லியா நடிப்பில் உருவாகி வரும் ஃப்ரெண்ட்ஷிப் பட த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷான் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கி தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், சதீஷ், பாலா ஆகியோர் பலரும் நடிக்கின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஃப்ரெண்ட்ஷிப் படம் தொடங்கப்பட்டது.

பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்தப் பட த்தின் சாங் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஹர்பஜன் சிங், சதீஷ், பாலா ஆகியோர் வேஷ்டி சட்டையில் நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதனைப் பார்க்கும் போது அது குத்துப்பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது:

தமிழனின் தாய்மடி #கீழடி #தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி! எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த Summer நம்ம படம் #Friendship வருது #தளபதி #தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம் என்று பதிவிட்டுள்ளார். விரைவில், பட த்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படமும், ஹர்பஜன் சிங் கூறியது போன்று தல, தளபதி படமாக இருக்கும் என்று தெரிகிறது.

Views: - 348

0

0