தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார்.
அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.
இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் வாரி குவித்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு படத்துக்காக ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதன்மூலம், ஆண்டுக்கு ரூ. 1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம்.
இந்நிலையில் 33 வயதாகும் கவினுக்கு பெற்றோர் திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஆம், வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளதாம். பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை தான் கவின் திருமணம் செய்கிறார். திருமண வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில் லாஸ்லியாவிற்கு ஸ்டைலிஸ்ட்-ஆக மோனிகா டேவிட் பணியாற்றி இருக்கிறார். லாஸ்லியாவுடன் கவினின் வருங்கால மனைவி மோனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலானது.
திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை வைத்து ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவிடம் அது குறித்து கேள்விகளை கேட்டு வம்பிழுத்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லாஸ்லியா “too glam to care” என caption’யிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.