கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கவின். இதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இதனைத் தொடர்ந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய கவின், நட்புன்னா என்னனு தெரியுமா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2019ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் இவரது பெயர் அடிபட்டது.
பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றுவிட்டனர். கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கவின். இதனிடையே கடந்த மாதம் கவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று கவின் – மோனிகா டேவிட் திருமணம் சென்னையில் உள்ள பார்க் ஹயாட் ஓட்டலில் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஏராளமான ரசிகர்களும் கவினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது சோகமான புகைப்படத்தை பதிவிட்டு லாஸ்லியா என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை என்ற கேப்சன் போட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கவினை நினைத்து மனமுருகி தான் லாஸ்லியா இந்த பதிவை போட்டுள்ளார் என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க கல்யாணம் முடிஞ்சாலும் என்னை நிம்மதியா இருக்க விட மாட்ட போல என்று கவின் மைண்ட் வாய்ஸ் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.