மனைவி பெயரில் பச்சை குத்திய சினேகன்..

Author: kavin kumar
3 October 2021, 2:56 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. அதில் முக்கியமானவர் பாடலாசிரியர் சினேகன். சமீபத்தில் தான் சினேகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் இயக்குனர் ஹரி படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடலாசிரியர் சினேகன் சில படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியின் பிக் பாஸில் கலந்துகொண்ட சினேகன் அதன்பின் கமல் ஆரம்பித்த மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்த சினேகனுக்கு சமீபத்தில் கல்யாணம் நடந்தது. தனது காதலியான கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில்
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடியில் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சினேகன். இந்நிலையில் அவர் தனது மனைவியின் பெயரான கன்னிகா என்று தனது கையில் பச்சை குத்தியுள்ளார். அது மட்டுமில்லாமல் தனது கணவரான சினேகனின் பெயரை பச்சை குத்தியுள்ளார் கன்னிகா. இந்த புகைப்படங்கள் தற்போது COUPLE GOALS என்று வைரலாக பரவி வருகிறது

Views: - 563

1

0