சந்தானம், சூரி ஆகிய இருவரும் தொடக்கத்தில் காமெடி நடிகர்களாக சினிமாவில் ஜொலித்தவர்கள். அதன் பின் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்க சூரி “விடுதலை” திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 16 ஆம் தேதி சந்தானத்தின் “டிடி நெக்ஸ்ட் லெவல்” சூரியின் “மாமன்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்தன.
இதில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இன்னொரு பக்கம் “மாமன்” திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
“டிடி நெக்ஸ்ட் லெவல்”, “மாமன்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் ரூ.21 கோடிகளே வசூல் செய்துள்ளது. ஆனால் சூரியின் “மாமன்” திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.40 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது. இதன் மூலம் சந்தானம் படத்தை ஓரங்கட்டி வசூல் வேட்டையில் சூரியின் படம் சூறாவளி போல் வசூலை அள்ளிச் சென்றுள்ளது தெரிய வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.