ரீலீஸ் ஆன மாநாடு Single… பாட்டு சும்மா சக்கபோடு போடுது ! யுவன் பட்டைய கெளப்பி இருக்காரு…!

21 June 2021, 1:17 pm
Maanaadu track - Updatenews360
Quick Share

இந்த 2021-ஆம் வருடம் யாருக்கு நல்லபடியாக அமைந்ததோ இல்லையோ சிம்புவிற்கும் சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஒருபக்கம் ஈஸ்வரன் தோல்வியடைந்தாலும் படம் வெளிவந்ததே வெற்றியாகக் பார்க்கும் சிம்பு ரசிகர்களும், மறுபக்கம் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் படங்களை பற்றி அப்டேட்களை வாரி குவிக்கும் சிம்புவை பார்க்கும் மற்ற ரசிகர்களுக்கு பொறாமையாகவே உள்ளது.

சில வருடங்களுக்கு முன், சிம்பு குண்டாக இருந்ததால் அவரின் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘ பத்து தல ‘ கௌதம் மேனன் இயக்கத்தில்” நதிகளிலே நீராடும் சூரியன்” என மற்றொரு படம்னு அதகளம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த வருடம் சிம்புவுக்கு 3 படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என இண்டஸ்ட்ரியில் ஒரு தகவல் நிலவ, தற்போது இருக்கும் மக்களின் நிலைமையை பார்த்தால், அதற்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

இந்த நிலையில் ரொம்ப நாளாக மாநாடு பற்றிய அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை என்று செல்லமாக கோபித்துக் கொண்டு இருந்த சிம்பு ரசிகர்களுக்கு, இன்று மாநாடு படத்தின் சிங்கிள் ரிலீசாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. Meherezylaa என்னும் இந்த பாட்டை கேட்ட சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்தப் பாட்டை ரசித்து கேட்கின்றனர். இஸ்லாமிய திருமணம் ஸ்டைலில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பல திருமணங்களில் நாம் கேட்க வாய்ப்புகள் இருக்கிறது.

Views: - 423

4

3