தள்ளிப்போன மாநாடு.. தீபாவளி ரேஸில் இருந்து விலகல் : இதுதான் காரணமாம்… படக்குழுவினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

Author: Babu Lakshmanan
18 October 2021, 1:29 pm
maanadu - updatenews360
Quick Share

தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு திரைப்படம், தற்போது பண்டிகைக்கு பிறகு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம். நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கு இடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் ‘மாநாடு’. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்து செய்யப்பட்டு விட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால், என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல, விநியோகஸ்தர்களும், திரையரங்க வௌயீட்டிற்காய் பணம் போட்டவர்களும் ஏன் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும் நட்டமடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும், அதன் வெற்றியும் பணிய வேண்டும்?. ஆனால், மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ம் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப் போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 362

0

0