“மாறன்” படத்தில் ஓப்பனிங் பாடல் குறித்து மாஸான அறிவிப்பு வெளியிட்ட ஜிவி பிரகாஷ்..!

Author: Mari
12 January 2022, 2:19 pm
Quick Share

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாறன். இந்த படடத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.


இப்படத்தில் இயக்குனர் அமீர், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தற்போது படத்தின் முதல் பாடல் குறித்து ட்டுவிட்டரில் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதில், மாறன் படத்தின் ஓப்பனிங் பாடலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் நடிகர் தனுஷுடன் இணைந்து தெருக்குரல் அறிவு பாடியுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாறன் படத்தில் மாஸான ஓப்பனிங் பாடல் இடம் பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Views: - 265

0

0