ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த “சிகந்தர்” திரைப்படம் படுதோல்வியடைந்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த நிலையில் ரூ.177 கோடியே வசூலாகி இருந்தது. இது அத்திரைப்படத்தை தயாரித்த சஜித் நடியட்வாலாவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
இத்திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கிக்கொண்டிருந்த அதே சமயத்தில்தான் தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தையும் இயக்கிக்கொண்டிருந்தார். “மதராஸி” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த மேக்கிங் வீடியோவின் மூலம் இத்திரைப்படம் ஒரு அதிரிபுதிரியான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. படம் முழுவதும் ரணகளமான சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில்தான் ரசிகர்கள் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
அதாவது “சிகந்தர்” திரைப்படமும் இது போன்ற ஒரு ஆக்சன் திரைப்படமாகத்தான் அமைந்திருந்தது, ஆனால் அத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. அந்த வகையில் “மதராஸி” படமாவது பந்தயம் அடிக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.