சினிமா / TV

First Half-லயே நொந்துப்போன ஆடியன்ஸ்? இந்த படமும் புட்டுக்குச்சா? மதராஸி ரிசல்ட் என்ன!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மதராஸி”. இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இதில் வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரசாத் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.  இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் எந்த மாதிரியான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள் என பார்க்கலாம்.

எக்ஸ் பயனர் ஒருவர் “மதராஸி” திரைப்படத்தை Disaster என்று விமர்சனம் செய்துள்ளார். ஏ ஆர் முருகதாஸின் 7 ஆம் அறிவு சிறப்பாக இருந்ததாகவும் தற்போது அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து மற்றொருவர் “முதல் பாதி ஸ்லோவாக உள்ளது. இன்டெர்வெல் காட்சி மட்டும் நன்றாக ஒர்க்கவுட் ஆகி இருந்தது” என விமர்சனம் வைத்துள்ளார்.

மற்றொரு பயனாளர் ஒருவர், “AR Murugadoss is back” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “முதல் பாதி முழுவதும் Love and Action. இரண்டாம் பாதி முழுவதும் சண்டைக் காட்சிகள்தான்” என கூறியுள்ளார்.

இன்னும் ஒரு பயனர், “மதராஸி படத்தின் முதல் பாதி முழுக்க காதலும் ஆக்சனும்தான். இரண்டாம் பாதி டீசன்ட்டாக இருக்கிறது. மொத்ததில் ஒரு Above Average திரைப்படம்” எனவும் விமர்சித்துள்ளார். இவ்வாறு “மதராஸி” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன.

சமீப காலமாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்ற நிலையில் “மதராஸி” திரைப்படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும்  என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.