தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகையான தேவயானி வெகு சீக்கிரத்தில் ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார். குறிப்பாக சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.
தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தொடர்ந்து திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் தேவயானி அண்மை காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் கூட தனது இரண்டு மகள்கள் , கணவர் என குடும்பத்தோடு கலந்துக்கொண்ட நேர்காணல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் தேவயானியின் வீட்டில் உள்ள விசித்திர வசதி குறித்த தகவல் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5.30 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்த தேவயானி. அங்கேயே தனக்கு பிடித்தது போன்று பார்த்து பார்த்து அழகான வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் தேவயானி குறித்த ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை அவரது கணவர் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது தேவயானி எங்கு சென்றாலும் அவர் தினமும் பூஜை செய்வது வழக்கமான ஒன்று. அப்படித்தான் ஒரு முறை ஷூட்டிங் சென்ற போது சிங்கப்பூர் ஹோட்டலில் பூஜை மணியடித்து ஸ்வாமியை வழிபட்டுள்ளார். அதை அடுத்த அறையில் இருந்த மாதவன் கேட்டு, சிங்கப்பூர் ஹோட்டலில் பூஜை மணியடிப்பது யார் என்று வந்து பார்த்தல் தேவயானி பக்தி பரவசத்தில் சாமியை வழிபட்டுள்ளார். அதை மாதவனே என்னிடம் வந்து கூறினார் என ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.