“மகனால் மிகவும் பெருமை அடைகிறேன்” – நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற மகனை பாராட்டி மாதவன் ட்வீட்

3 March 2021, 10:51 pm
Quick Share

சாக்லேட் பாய் என்ற பட்டத்தை பல வருடங்களாக தனக்குள் வைத்து இன்னும் ரசிகைகளின் மனதில் பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக்கொண்டுள்ளார் மாதவன். மின்னலே தொடங்கி தற்போது அமேசான் பிரைம் இல் வெளியான மாறா படம் வரை தான் சாக்லேட் பாய் என்பதை நிரூபித்து வருகிறார். ஆனால் இது மட்டுமில்லாமல் இறுதிச்சுற்று படத்தில் உடம்பு ஏற்றியது, ஆயுத எழுத்து போன்ற படங்களின் மூலம் தனக்குள் இருக்கும் வெரைட்டியான நடிப்பை தந்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற திரைப்படம் இஸ்ரோவில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவருக்கு கல்யாணம் ஆகி டீன் ஏஜ் வயதில் ஒரு பையன் இருக்கிறார் என்றால் பாதி பெண்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் அவருடைய பையன் மற்றொரு துறையில் சாதித்து வருகிறார்.

நீச்சல் விளையாட்டில் முன்னேறி வரும் மாதவனின் மகன் வேதாந்த், தற்போது இந்திய சார்பாக கலந்து கொண்டு லட்வியன் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது பரிசாக வெண்கலம் பதக்கம் வென்றார். இதை பாராட்டி மாதவன் ட்வீட் செய்துள்ளார். அதில், ” மகனால் மிகவும் பெருமை அடைகிறேன்” என பாராட்டியுள்ளார்.

Views: - 1

5

0