8 வருஷம் ஆச்சு.. முதல் மனைவியின் நினைவால் உருகி தவிக்கும் மதுரை முத்துவின் எமோஷனல் பதிவு..!

சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பிரபல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் அவ்வப்போது, மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். இப்போது, விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது நகைச்சுவையை வெளிக்காட்டி வருகிறார். இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்.

மதுரை முத்துவின் மனைவி பெயர் லேகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். எதிர்பாராத விதமாக லேகா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். பின் தனது 32வது வயதில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரைமுத்து மறுமணம் செய்துகொண்டார்.

இதனை பலரும் விமர்சித்த போதிலும், மதுரை முத்து தன் இரண்டு மகள்களுக்காக தான் திருமணம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், தன் முதல் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று மதுரை முத்து கூறியுள்ளார்.

அண்மையில், தனது முதல் மனைவி குறித்து ஒரு பேட்டியில் பேசிய மதுரை முத்து, “என் முதல் மனைவிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் இல்லாமல் அவர் படும் கஷ்டத்தை கண்டு வருத்தப்பட்டேன், நான் உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டேன். இரண்டாவது திருமணம் என்பதால் இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை, பல எதிர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்தோம்” என கூறி இருந்தார். இந்த நிலையில், மதுரை முத்து தனது முதல் மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு 8ம் ஆண்டு நினைவுநாள், நினைவோடு என்று கூறிப்பிட்டுள்ளார். இதனை கவனித்த செட்டிசன்கள் கமெண்ட்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

13 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

15 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

15 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

16 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

17 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

17 hours ago

This website uses cookies.