சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பிரபல நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் அவ்வப்போது, மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். இப்போது, விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனது நகைச்சுவையை வெளிக்காட்டி வருகிறார். இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்.
மதுரை முத்துவின் மனைவி பெயர் லேகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். எதிர்பாராத விதமாக லேகா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். பின் தனது 32வது வயதில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரைமுத்து மறுமணம் செய்துகொண்டார்.
மேலும் படிக்க: என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்… ஜெமினி கணேசன் மகளுடன் ரகசிய உறவில் இருந்த சூப்பர் ஸ்டார்..!
இதனை பலரும் விமர்சித்த போதிலும், மதுரை முத்து தன் இரண்டு மகள்களுக்காக தான் திருமணம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், தன் முதல் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று மதுரை முத்து கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Insecure ஆக இருந்துச்சு.. மோசமான அனுபவம் குறித்து பேசிய சாய் தன்ஷிகா..!
அண்மையில், தனது முதல் மனைவி குறித்து ஒரு பேட்டியில் பேசிய மதுரை முத்து, “என் முதல் மனைவிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் இல்லாமல் அவர் படும் கஷ்டத்தை கண்டு வருத்தப்பட்டேன், நான் உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டேன். இரண்டாவது திருமணம் என்பதால் இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை, பல எதிர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்தோம்” என கூறி இருந்தார்.
இந்த நிலையில், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் நீத்து அதாவது மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி எதிர்மறையான சில பதிவுகளை பதிவிட்டு வருகின்றார். வருத்தத்துடன் அவர் இருக்கும் சில பதிவுகள் வெளிவந்தது. அண்மையில், மருத்துவமனையில் இருப்பது போன்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில், யாரையும் முழுவதுமாக நம்ப வேண்டாம் என்பது போன்றும், பலருக்காக பலமுறை இறங்கி வந்திருப்பதாகவும் பலருக்காக பேசியிருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் மதுரை முத்துவிற்கும் அவருடைய மனைவிக்கும் ஏதாவது பிரச்சனையா அதனால்தான் இப்படி அவர் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறாரா என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இருந்தாலும், இது குறித்து மதுரை முத்து அல்லது அவருடைய மனைவி விளக்கம் கொடுத்தால் மட்டும்தான் உண்மை என்பது தெரியவரும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.