“என் படம் ஆந்திராவுல ஹிட் ஆனா இங்க ஒரு நடிகருக்கு மூக்கு வேர்த்துடும் ” – மகேஷ்பாபு

11 January 2020, 11:22 am
magesh_babu_updatenews360
Quick Share

தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் மகேஷ்பாபு. டோலிவுட்டின் ‘பிரின்ஸ்’ என அழைக்கப்படும் மகேஷ்பாபு, தற்போது நடித்துள்ள படம், சரிலேரு நீக்கெவ்வரு.

இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.

அனில் ரவிபுடி இயக்கியுள்ள இதில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திரபிரசாத், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் இன்று ரிலீசாகி வெற்றிகரமாக மக்களிடம் போய் சேர்ந்தது. இந்த படம் சென்னையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் Promotion – க்காக மகேஷ்பாபு ஒரு பிரபல YouTube – Channel – இல் அளித்த பேட்டியில் Exclusive!!

“என் படம் ஆந்திரால ஹிட் ஆனா போதும்‌ இங்கயும் மக்கள் மத்தியில் நல்ல Response இருந்துருக்கு.
ஆனா ஒரு தமிழ் நடிகர் ஒருத்தருக்கு என்னோட வளர்ச்சி அவ்ளோவா பிடிக்கல.என் படம் ஆந்திராவுல ஹிட் ஆனா இங்க ஒரு நடிகருக்கு மூக்கு வேர்த்துடும்.

என்னோட Sensational Hit ஒக்கடு படத்தை கில்லினு ரீமேக் பண்ணினாங்க. அந்த படத்தின் உரிமையை வாங்கிய பின் சென்னையில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அந்த படத்தை தூக்கிவிட்டார்கள். என்னோட ஒவ்வொரு படம் ஹிட் ஆன உடனே அதை Remake பன்றதுக்கு Rights வாங்குவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னோட வருத்தம் என்னனா படத்த Remake பண்ணி நடிக்குறதால சென்னைல நல்லா ஓட வேண்டிய படத்த சீக்கிரமே தூக்கிருவாங்க அதுதான் என்னோட பெரிய வருத்தம் அதனால் நானே தமிழ்ல டப்பிங் பண்ணி RELEASE பண்ணி இங்க கொண்டு வந்துட்றேன் ! “

மகேஷ்பாபு குறிப்பிட்டு சொன்னது விஜய்தான் என்று ஆணித்தரமாக அஜித் ரசிகர்கள் குற்றம் சாடினாளும், மகேஷ்பாபுவின் இந்த பேச்சு நிறைய பேரை குற்ற உணர்விற்கு கொண்டு வந்தது.