மகா கும்பமேளாவில் தனது வசீகரப் பார்வையால் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற மோனலிசா என்ற பெண் பாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார்.
இந்தூர்: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 முதல் மகா கும்பமேளா நடைபெற்றது. இந்த நிலையில், நர்மதா நதிக்கரையில் உள்ள கிலா காட் என்ற பகுதியில் பல ஆண்டுகளாக பூக்கள் மற்றும் மாலைகளை விற்று வந்தாலும், ருத்ராட்ச மாலைகளை விற்பதை இன்ஸ்டா பிரபலம் ஒருவர் தன்னுடய பக்கத்தில் பகிர்ந்தபோது மிகவும் புகழ் பெற்ற பெண்ணாக மாறினார் மோனலிசா போஸ்லே.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 16 வயது சிறுமிதான், யூடியூப் ட்ரெண்டிற்குப் பிறகு சர்வதேச ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். அழகிய கண்களாலும், வசீகரப் பார்வையாலும் கவர்ந்த பெண்ணைப் பார்க்க பக்தர்கள் சிலர், ரசிகர்களாக மாறி, அவரது கூடாரத்துக்கு முன்னாள் குவிந்த காட்சிகளையும் காண முடிந்தது.
இந்த நிலையில், ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தில் மோனலிசா நடிக்க இருப்பதாக, அப்படத்தின் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சனோஜ் மிஸ்ரா அறிவித்துள்ளார். இவர் இதற்கு முன்பு, ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக மோனலிசாவைச் சந்தித்து, அவருடனான படங்களை இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், மோனலிசா, கார்கோன் மாவட்டத்தின் மகேஷ்வரில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: ‘நான் ஆட்டிக்கிட்டே தான் பேசுவேன்..’ கோபத்தில் விஷால்,. ’அந்த’ பேரைக் கேட்டதும் கொடுத்த ரியாக்ஷன்!
இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மோனலிசாவைச் சந்திக்க கூட்டம் கூடியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அவரைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த நிலையிலும், அவருக்கு பாலிவுட் கதவு திறக்கப்பட்டிருக்கிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.