கம்பி எண்ணும் கணவன்… கண்டுக்காமல் சீரியல், போட்டோஷூட், விளம்பரம்னு மஜா பண்ணும் மகாலக்ஷ்மி!

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியலில் கலக்கி வருபவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லத்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ளும் வைக்கும் வகையில் இருந்தாலும், இவரது நடிப்பு திறமையை பலரும் பாராட்டி தான் வருகிறார்கள்.

அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்துவரும் இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது அனைவரும் அறிந்த விஷயமே. கடந்த ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்திரனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி உருவக்கேலிக்கு ஆளாகி பல எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.

இப்படியான நேரத்தில் விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவிந்தர் கடந்த ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி 20 லட்ச ரூபாயை பணமாக கேட்டுள்ளார். நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக விஜய் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

உடனே விஜய் தன்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனை பெற்றுக்கொண்டு ரவீந்தர் இதனை 16 லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தனக்கு தன்னுடைய பணம் மட்டும் வந்தால் போதும் என்று கூறிவிட்டு இரண்டு தவணையாக ரூபாய் 15 லட்சத்தினை வங்கி கணக்கில் செலுத்தியும் உள்ளார்.

பின்னர் ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு விடுமுறை, செக் அனுப்பி இருக்கிறேன், நெஃப்ட் போட்டு இருக்கிறேன், என்று பல காரணங்களை தெரிவித்து AVOID செய்தும் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த விஜய் சில ஆதாரங்களை சமர்ப்பித்து ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து சென்னை கமிஷனருக்கு புகார் ஒன்றினையும் அளித்தும் உள்ளார். மேலும், விஜய்யின் மனைவியை ரவீந்தர் மிகவும் தவறாகவும் தரைக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகும் விஜய் தரப்பில் புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து ரவீந்தர் தரப்பில் கூறுகையில், 15 லட்சம் வாங்கியது உண்மை தான் ஆனால், இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு முடியாமல் தன்னிடம் கொடுத்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யின் உறவினர்கள் வந்தால் செக் கொடுத்து விடுவேன் என்று கூலாக பதிலும் அளித்துள்ளார்.

இந்நிலையில், ரவீந்தர் இந்த பணத்தை அளித்த பின்பு தான் தனது திருமண தேதியை அறிவிக்கப் போவதாக பேசிய ஆடியோ ஒன்றை விஜய்யும் லீக் செய்துள்ளார். இதனால் அந்த பணத்தை வாங்கி தான் திருமணத்தையே நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், திடக்கழிவு மூலம் மின்சாரம் தயாரிப்பதாக கூறி பாலாஜி என்ற நபரிடம் ரூ. 16 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். பலமுறை ஜாமீன் கேட்ட ரவீந்தரின் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடியும் செய்தனர்.

ஆனால், ரவீந்தர் அந்த 16 கோடியில் 2 கோடி திருப்பி கொடுத்துவிட்டதாக விசாரணையில் கூறினார். அதற்கு பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 2 கோடி திரும்ப வழங்கவில்லை 16 கோடியை திரும்ப வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து 2 கோடி வழங்கியதற்கான ஆவணத்தினை நீதிமன்றத்தில் அறிக்கை வெளியிட போலிசுக்கு உத்தரவிட்டதுடன் அக்டோபர் 6ஆம் தேதி விசாரணைக்கு உத்தரவிட்டார் நீதிபதி கார்த்திகேயன். இதனால் ரவீந்தரின் சிறைச்சாலை நீடித்தும் இருக்கிறது. ஆனால், இது எதையுமே கண்டுக்கொள்ளாமல் மகாலட்சுமி சீரியல் ஷூட், போட்டோஷூட், விளம்பரம் என்று பிஸியாக இருந்து வருகிறார். விரைவில் இந்த காதல் புறாக்கள் பிச்சிகிட்டு ஓடிடும் என எல்லோரும் விமர்சித்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

6 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

7 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

7 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

8 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

9 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

9 hours ago

This website uses cookies.